உலகம்
மின்னஞ்சல் விவகாரத்தில் மீண்டும் ஹிலரி கிளின்டனை சாடும் ட்ரம்ப்
மின்னஞ்சல் விவகாரத்தில் மீண்டும் ஹிலரி கிளின்டனை சாடும் ட்ரம்ப்
ரஷ்யாவுடனான தொடர்பு குறித்த விவகாரத்தில் ஹிலரி கிளிண்டனையும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ட்விட்டரில் அடுத்தடுத்து பதிவிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தமக்கு ஆதரவாக குடியரசுக் கட்சியினர் அணி திரண்டிருப்பதாக கூறினார். கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது, ஹிலரி கிளிண்டனைத் தோற்கடிப்பதற்கு ட்ரம்பின் பரப்புரைக் குழுவுக்கு ரஷ்யா உதவியதாக ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்யாவுடனான தொடர்பு குறித்த விவகாரத்தில் ஹிலரி கிளிண்டனையும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியையும் குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பான விசாரணையில், சிலர் கைது செய்யப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.