ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
Published on

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவை சேர்ந்தவர் ரேமண்ட் ஹாரிங்டன். கடந்த ஜூலை மாதம் அங்குள்ள கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லாட்டரி கடைக்குச் சென்ற அவர் ஒரே குலுக்கலுக்கான இருபத்தைந்து லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய ஒவ்வொரு லாட்டரி சீட்டும் ஒரு அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டவை.

அந்த குலுக்கலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ஹாரிங்டன் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அதற்கான காரணம் என்னவென்றால் ஹாரிங்டன் வாங்கிய 25 சீட்டுக்கும் பரிசு வீழ்ந்துள்ளது. ஒரு சீட்டிற்கு 5000 அமெரிக்க டாலர் வீதம் மொத்தமாக 125000 அமெரிக்க டாலர்களை வென்றிருந்தார் அவர்.

‘ஏனோ தெரியவில்லை 25 சீட்டுகளை வாங்க வேண்டுமென முடிவெடுத்தேன். ஒரு விளையாட்டு முயற்சியாக தான் இதை செய்தேன். ஆனால் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. இதில் கிடைத்த பணத்தை எனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பயன்படுத்த உள்ளேன்’ என தெரிவித்துள்ளார் அதிர்ஷ்டசாலியான ஹாரிங்டன்.

இந்திய மதிப்பில் சுமார் 93 லட்ச ரூபாயை ஹாரிங்டன் வென்றுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com