இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம்!

இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம்!
இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம்!

இந்திய, சீன எல்லையில் இரு நாடுகளும் தலா 3 ஆயிரம் படை வீரர்களுக்கு மேல் குவித்துள்ளன.

இந்திய, சீனா எல்லையில் சிக்கிம், பூடான், திபெத் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்னும் விவகாரம் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால், இரு நாடுகளிடையே அடிக்கடி பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களை சீனா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், இரு நாடுகளிடையே உள்ள டோக்லம் பகுதியில், சீனா சாலை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பகுதி தனக்கு செந்தமானது என தொடர்ந்து கூறி வரும் சீனா, இந்தியப்படைகள் அத்துமீறி நுழைந்து இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறது. எனினும் இரு நாடுகளும் தங்கள் நிலைகளில் இருந்து பின்வாங்க மறுத்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து சீனா, சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்ட கொடி கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com