\
Tropical Cyclone Xavier develops intense eye as seen in satellite
cycloneReuters

சேவியர் புயலால் பேரழிவு? 240 கி.மீ வேகத்தில் காற்று! 35 அடி உயர ராட்சத அலை!

பசிபிக் பெருங்கடலில் சேவியர் என்ற வெப்ப மண்டல புயல் உருவாகி பெரும் சேதங்களை ஏற்படுத்த உள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

நவம்பர் முதல் வாரத்தில், தெற்கு பசிபிக் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நவம்பர் 15-ஆம் தேதி அன்று வெப்ப மண்டலாக புயலாக உருவானது தான் சேவியர். இந்த புயல், வடக்கு குக் தீவில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மிகவும் மெதுவான வேகத்தில் தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்துக் கொண்டு உள்ளது. பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய 5-வது வகையை சேர்ந்த சேவியர், நவம்பர் மாதத்தில் தெற்கு அரைக்கோளத்தில் உருவான மிக வலிமையான புயலாக பார்க்கப்படுகிறது. இந்த புயலின் உச்ச நிலையில், மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், நடுத்தர அளவிலான சீற்றம் இருக்கும்போது 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது.

cyclone
cyclonereuters

இந்த புயல், தற்போது கடலில் உருவாகி இருப்பதால், அந்த சில பகுதிகளில் மட்டும் சுமார் 35 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக கடல் பகுதியிலேயே நகர்ந்து வருவதால், நியூசிலாந்து நாட்டிற்கு பெருமளவு நேரடி பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று, அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குக் தீவுகள், மனிஹிகி, ரகஹங்கா, பென்ரிஹின், புக்காபுக்கா, நாசாவ், சுவாரோ ஆகிய தீவுப் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமோவா, நியூ (Niue) போன்ற பகுதிகளிலும், கடல் அலைகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும். செயற்கைக் கோள் படங்களில், புயலின் மையத்தின் தெளிவான தீவிரமான கண் பகுதி உருவாகியிருப்பது அதன் வலிமையை காட்டியுள்ளது என்றும், வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது இத்தகைய வலிமையை இந்த புயல் பெற்றிருந்தாலும், இது கொஞ்சம் கொஞ்சமாக தனது உச்ச வலிமையை இழந்து வருவதாகவும், வரும் நாட்களில் வறண்ட காற்று மற்றும் மாறும் கடல் சூழல்களால் மேலும் வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tropical Cyclone Xavier develops intense eye as seen in satellite
ஜென்சென் ஹூவாங்கை புகழ்ந்த ட்ரம்ப்.. சீனப் பெண்கள் குறித்து கூறியது என்ன?