‘இப்படியெல்லாம் கூடவா ரிஸ்க் எடுப்பாங்க’... புதுமணத் தம்பதியின் ஹனிமூன் ஃபோட்டோ ஷுட்

‘இப்படியெல்லாம் கூடவா ரிஸ்க் எடுப்பாங்க’... புதுமணத் தம்பதியின் ஹனிமூன் ஃபோட்டோ ஷுட்
‘இப்படியெல்லாம் கூடவா ரிஸ்க் எடுப்பாங்க’... புதுமணத் தம்பதியின் ஹனிமூன் ஃபோட்டோ ஷுட்

உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் புதுமணத் தம்பதி ஒன்று ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளது வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் திருமணம் நடைபெறும்போது அந்த இனிய நாளை எப்போதும் பசுமையாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பதிகள் மட்டும் இருக்கும் புகைப்படங்களும், குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது திருமணத்திற்கு முன்பு மற்றும் திருமணத்திற்கு பின்பான புகைப்படங்கள் எடுப்பது, அதுவும் வித்தியாசமான சூழலில், வித்தியாசமான முறையில் சாகசங்கள் நிறைந்து, சினிமாவை மிஞ்சும் வகையில் புகைப்படங்கள் எடுப்பது பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் குரோஷியோவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளது வைரலாகி வருகிறது. குரோஷியாவைச் சேர்ந்த கிறிஸ்டிஜான் இலிசிக் (35) மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ட்ரகோவ்செவிக் (29), தங்களது ஹனிமூன் ஃபோட்டோஷுட்டை நடத்தியுள்ள புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகிறது.

பயண விரும்பிகளான இந்த தம்பதி திருமண உடையில் இந்த ஃபோட்டோஷுட்டை நடத்தியுள்ளனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடியது இந்த ரயில்.

பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும். இந்த ரயிலில்தான் புதுமணத் தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அதுவும் ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை இவர்களின் நண்பர் ஒருவர் தான் எடுத்துள்ளார். இந்த நீளமான ரயில் அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள நௌதிபோவில் உள்ள துறைமுகத்திலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு சிறிய துறைமுகம், நௌதிபோ வரை இயங்குகிறது.

சரக்கு ரயில் என்பதால், இதில் பயணிகள் பயணிக்க பணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் சில சமங்களில் சிலர் இவ்வாறு பயணம் செய்வது உண்டு என்றும் கூறப்படுகிறது. 150 நாடுகளுக்கு மேல் இதுவரை இந்தத் தம்பதி பயணம் செய்து தங்களது சமூகவலைத்தளப் பக்கங்களில் வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com