தேனீக்கள் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிவது சாத்தியம் - நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்

தேனீக்கள் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிவது சாத்தியம் - நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்
தேனீக்கள் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிவது சாத்தியம் - நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள்

தேனீக்கள் மூலமாக கொரோனா வைரஸை எளிதில் கண்டறிவதை சாத்தியப்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். எங்கு? எப்படி? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் உள்ளதா என்பது குறித்து அறிய பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்க சில மணி நேரங்கள் கூட ஆகிறது. ஆனால் சில நிமிடங்களில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

நெதர்லாந்தில் தேனீக்கள் மூலமாக கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 150 தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட sample-களில், இனிப்பை தடவி வைக்கின்றனர். இதையடுத்து ஒவ்வொரு தேனீக்களுக்கும் ஒவ்வொரு sample கொடுக்கப்படுகிறது. அப்போது, தேனீக்களின் மோப்ப சக்திகளின் மூலம், கொரோனா வைரஸ் இருக்கும் sample -களில் மட்டும் நாக்கை நீண்ட நேரம் பற்றிக் கொண்ட படி தேனீக்கள் இருக்கிறது. வைரஸ் இல்லாத sample - களை தேனீக்கள் அதிகம் தொடுவது இல்லை.

ஒவ்வொரு முறையும், புதிய தேனீக்களை எடுத்து, குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்வதாகவும், இந்த ஆராய்ச்சியின் மூலமாக, 95 விழுக்காடு அளவிற்கு பரிசோதனையில் உண்மைத் தன்மை உள்ளதாகக் கூறுகின்றனர்.

ஏற்கனவே கனிமம் நிறைந்த தாதுக்கள் மற்றும் நிலச் சுரங்கங்களை கண்டுபிடிப்பிக்கும் ஆராய்ச்சியில் தேனீக்களை ஈடுபட வைத்து வெற்றிக் கண்டுள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் வெற்றி கிடைத்தால், மிகக் குறைந்த விலையில், சில நிமிடங்களில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறியலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com