கப்பல் மீது 25 டன் குளோரின் சிலிண்டர் விழுந்து விபத்து: 12 பேர் பலி! பகீர் சிசிடிவி காட்சி

கப்பல் மீது 25 டன் குளோரின் சிலிண்டர் விழுந்து விபத்து: 12 பேர் பலி! பகீர் சிசிடிவி காட்சி
கப்பல் மீது 25 டன் குளோரின் சிலிண்டர் விழுந்து விபத்து: 12 பேர் பலி! பகீர் சிசிடிவி காட்சி

ஜோர்டான் நாட்டில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் மீது குளோரின் வாயு கொண்ட உருளை தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

அகாபா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில், 25 டன் எடை கொண்ட குளோரின் வாயு கொண்ட உருளை ஏற்றுமதி செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அந்த உருளை திடீரென்று அறுந்து விழுந்தது. உடனே அப்பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் நச்சு வாயு பரவியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கிரேன் அறுந்து கப்பல் மீது விழுந்ததும் மஞ்சள் நிறத்தில் நச்சுவாயு பரவும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தொழிலாளர்களும், கப்பல் துறைமுக ஊழியர்களும் பதறி அடித்து ஓட்டம் பிடிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் வீட்டிற்கு உள்ளே தங்கி, ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கரையோர மக்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும், கசிவு மற்றும் துப்புரவு நடவடிக்கையை சமாளிக்க சிவில் பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

குளோரின் என்பது தொழில்துறை மற்றும் வீட்டு சுத்தம் செய்யும் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய இரசாயனமாகும். இது சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மஞ்சள்-பச்சை நிறத்தில் காணப்படும் வாயுவாகும்.

குளோரின் உள்ளிழுக்கப்படும்போது, விழுங்கும்போது அல்லது தோலுடன் தொடர்பு கொள்ளும்போது, அது தண்ணீருடன் வினைபுரிந்து உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் அமிலங்களை உருவாக்குகிறது. அதிக அளவு வாயுவை உள்ளிழுப்பதால் நுரையீரலில் திரவத்தை உருவாக்கி நுரையீரல் வீக்கம் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com