அமெரிக்கா: 585 கி.மீ அப்பாலிருந்து பூமியை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

அமெரிக்கா: 585 கி.மீ அப்பாலிருந்து பூமியை ரசித்த சுற்றுலாப் பயணிகள்
அமெரிக்கா: 585 கி.மீ அப்பாலிருந்து பூமியை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

விண்வெளிக்கு ஆய்வுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவும் செல்லலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவிலிருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாக சென்றனர். பூமியிலிருந்து 585 கிலோ மீட்டர் அப்பால் சென்ற 4 பேரும் அங்கிருந்து பூமிப்பந்தை கண்டு ரசித்தனர். மேலும் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை மாறுபாட்டின் தாக்கத்தையும் உணர்ந்தனர். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா அருகிலுள்ள அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினர். உற்சாகத்தில் திளைத்த அவர்கள் படகு மூலம் கரைக்குத் திரும்பினர்.

அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது விருந்தினர்கள் 3 பேரும் என பெரும் தொகையை கட்டணமாக செலுத்தி விண்வெளி சுற்றுலா சென்றிருந்தார். அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல விண்வெளி சுற்றுலா பயணங்கள் நிகழ உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com