பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம்

பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம்

பனி சொர்க்கம் போல் காட்சியளிக்கும் மோஹி நகரம்
Published on

உறைபனியின் அழகை கண்டுக்களிக்க சீனாவின் வடக்குப்பகுதியில் உள்ள மோஹி நகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஹெலாங்ஜியாங் மாகாணத்துக்கு உட்பட்ட மோஹி நகரம், கடுமையான பனிப்பொழிவால் உறைபனி நகரமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டைவிட தற்போது 15 நாட்களுக்கு முன்பாகவே கடும் பனிப்பொழிவு தொடங்கியிருக்கிறது. வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கு குறைவாக உள்ள நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகளோடு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பனிச்சறுக்கில் உல்லாசமாக விளையாடுகின்றனர். மேலும் பனிசிற்பங்களைக் கண்டு ரசிக்கும் குழந்தைகள் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுகின்‌றனர். மிகவும் குளிரான தட்பவெப்பம் நிலவுவதால், பகல் பொழுது சுருங்கி இரவு பொழுது நீண்டதாக இருப்பது சுற்றுலா பயணிகளை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

மக்கள் வெந்நீரை மேல்நோக்கி வீசும் போது, அது பனிக்கட்டிகளாக மாறி கீழே விழுவது அப்பகுதியில் நிலவும் காலநிலையை காட்சிகளாய் விளக்குகிறது. வேடிக்கையாக தோன்றும் இந்த நிகழ்வை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துவருகின்றனர். இது போன்ற காட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது எனக் கூறும் சுற்றுலாப் பயணிகள், இத்தகைய சூழலை அனுபவிக்கவே இங்கு வந்ததாகவும், இந்த இடம் பனி சொர்க்கம் என்றும் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com