பணி ஓய்வுபெற்ற மோப்ப நாய்க்கு சேவை விருது - அதிகாரிகள் பிரியா விடை

பணி ஓய்வுபெற்ற மோப்ப நாய்க்கு சேவை விருது - அதிகாரிகள் பிரியா விடை
பணி ஓய்வுபெற்ற மோப்ப நாய்க்கு சேவை விருது - அதிகாரிகள் பிரியா விடை

போடர் மோப்ப நாயின் நான்காண்டு கால துப்பறியும் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதற்கு சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் அமைந்துள்ள வேளாண் உற்பத்திப் பொருட்களை தரம் பிரிக்கும் அலுவலகத்தில் போடர் என்கிற மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டு வந்தது. நோய் மற்றும் பூச்சி தாக்கப்பட்ட விளைபொருட்கள், தரம்குறைந்த பயிர்கள், அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லி உபயோகம் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும் அடையாளம் காணவும் இந்த போடர் மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. போடர் தனது நான்கு ஆண்டு கால சேவையில் 426 சம்பவங்களில் சிறப்பாகத் துப்பறிந்துள்ளது.

இந்த நிலையில் போடர் மோப்ப நாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு ஓய்வு கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த நாய்க்கு வெகு சிறப்பான பிரியாவிடை அளிக்கப்பட்டது. போடர் மோப்ப நாயின் நான்காண்டு கால துப்பறியும் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதற்கு சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதுகுறித்து போடர் மோப்ப நாயின் பராமரிப்பாளர் கைல் மோரன்டன் கூறுகையில், ''அதற்கு ஒரு பெரிய மூக்கு உள்ளது. நான் போடரை மிஸ் பண்ணுகிறேன். அது எல்லாவற்றையும் விட வேட்டையாடுவதையே விரும்புகிறது'' என்று  கூறினார்.

இதையும் படிக்க: உடைக்குள் இதெல்லாம் கடத்த முடியுமா? - பாம்பு, பல்லி ஆகியவற்றை கடத்தியவர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com