2023இல் இந்த வேலைகளுக்குதான் மவுசு அதிகம் - முதலிடத்தில் எந்த வேலை தெரியுமா?

2023இல் இந்த வேலைகளுக்குதான் மவுசு அதிகம் - முதலிடத்தில் எந்த வேலை தெரியுமா?
2023இல் இந்த வேலைகளுக்குதான் மவுசு அதிகம் - முதலிடத்தில் எந்த வேலை தெரியுமா?

சுகாதாரத்துறை சார்ந்த வேலைகளை அதிக பணிப் பாதுகாப்பு நிறைந்ததாக சொல்கிறது யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்.

தேவை, வளர்ச்சி, சராசரி சம்பளம், வேலைவாய்ப்பு விகிதம், எதிர்கால வேலைவாய்ப்புகள், மன அழுத்த நிலை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டில் அதிக தேவையுள்ள வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளின் பட்டியலை யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிறந்த வேலைவாய்ப்புப் பட்டியலில் கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த சாப்ட்வேர் டெவலப்பர் பணி, இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் அமேசான், மெட்டா, சேல்ஸ்ஃபோர்ஸ் உள்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு வந்தாலும், சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கான தேவை என்பது அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது.

யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் வெளியிட்ட 20 பணிகளில் சுகாதாரத்துறை சார்ந்த வேலைகள் அதிக பணிப் பாதுகாப்பு நிறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவர், செவிலியர் மற்றும் இதர சுகாதாரப் பிரிவில் உள்ள பணிகளை சிறந்த வேலைவாய்ப்பாக யுஎஸ் நியூஸ் பட்டியலிட்டுள்ளது.  

2023-ல் பணி பாதுகாப்பே முதலில் முக்கியம் எனக்கூறும் இந்த ஆய்வறிக்கை, ஸ்திரமற்ற பொருளாதாரச் சூழல் நிலவும் இந்த காலக்கட்டத்தில் நிலையான வேலைவாய்ப்பை தேடுபவர்கள் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. ZipRecruiter வெளியிட்ட சமீபத்திய ஆய்வின்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஐடி ஊழியர்களில் 25 சதவீதம் பேர் வேறுவேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வேலைபார்ப்பவர்கள் கடும் போட்டிச் சூழலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com