டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில் கமிட்டி?

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில் கமிட்டி?
டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா? - கொரோனாவால் குழப்பத்தில்  கமிட்டி?

கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் அரக்கனாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸால் ஏற்படும் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளது. 80ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா தாக்கம் வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால், ஜூலை 24ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகக் கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், வேறு தேதியில் ஒத்திவைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com