‘Fat Man’ - நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள் இன்று

‘Fat Man’ - நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள் இன்று
‘Fat Man’ - நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள் இன்று

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரத்தின் மீது சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியிருந்தது அமெரிக்கா. அந்த குண்டு வீச்சு தாக்குதலால் பல மக்கள் தங்களது இன்னுயிரை நீர்த்ததோடு, பல்வேறு விதமான இடரை ஜப்பான் எதிர்கொண்டது. 

நாகசாகி நகரில் மட்டும் சுமார் 70000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த தாக்குதலில் பலியாகி இருந்தனர். சரியாக இதே நாளில் கடந்த 1945-இல் அமெரிக்கா, நாகசாகி நகரில் ‘Fat Man’ என்ற அணுகுண்டை பகல் 11.02 மணி வாக்கில் வீசி இருந்தது. 

அந்த காயத்தின் நினைவாக நாகசாகி அமைதில் பூங்காவில் மக்கள் பலர் திரண்டு இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். “வடகிழக்கு ஆசியாவில் அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலத்தை உருவாக்க வேண்டும்” என அந்த நகர மேயர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான். இருப்பினும் இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்து நின்று முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அனைத்திலும் புதுமையை கடைப்பிடித்து வருவது தான். அண்மையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளையும் ஜப்பான் வெற்றிகரமாக நடத்தி முடித்தது அதற்கு உதாரணமாக சொல்லலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com