உலகம்
இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும்: சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும்: சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
இந்திய பயணத்தை தவிர்க்குமாறு சீன மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய-சீன எல்லையில் போர் பீதி நிலவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கடந்த ஜுலை மாதம் 8ம் தேதி, சீனா அறிவுரை வழங்கியிருந்தது. இந்நிலையில் சீன அரசு நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கையில், இந்தியா செல்லும் சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனர்கள் அடிக்கடி பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள், இயற்கை பேரிடர், தொற்றுநோய் அதிகரித்து வருவதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், எல்லை பிரச்னை தொடர்பாக பதற்றம் நிலவும் நிலையில் இந்திய பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.