உலகம்
ஏலம் போன TITANIC கப்பல் கேப்டனின் தங்கக் கடிகாரம்.. இத்தனை கோடியா?
டைட்டானிக் கப்பல் கேப்டனின் தங்கக் கடிகாரம் இந்திய ரூபாய் மதிப்பில் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பிறகு அதிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகின்றன.
அந்த வகையில் டைட்டானிக் கப்பலின் கேப்டன் பயன்படுத்தி வந்த தங்கக் கடிகாரம் ஏலத்திற்கு வந்தது. இது இந்திய மதிப்பில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
titanic captain gold watch
இதுவே டைட்டானிக் கப்பலின் ஏலப் பொருட்களில் அதிக விலைக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டைட்டானிக் கப்பலில் இருந்த வயலின் 2013 ஆம் ஆண்டு 11 கோடியே 65 லட்சத்திற்கு விற்பனையானது.