கமலா ஹாரிஸ்புதியதலைமுறை
உலகம்
திருவாரூர் | கமலா ஹாரிஸ் தோல்வி எதிரொலி.. சோகத்தில் உறைந்து போன துளசேந்திரபுரம் கிராம மக்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததால், அவரது பூர்விக கிராமமான துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததால், அவரது பூர்விக கிராமமான துளசேந்திரபுரத்தைச் (திருவாரூர் மாவட்டம்) சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கடந்த சில நாட்களாக கோயில்களில் வழிபாடு நடத்தி வந்தனர். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் , இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த முறை கமலா ஹாரிஸ் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் என அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.