கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1,898 கோடி நிதி - டிக்டாக் அறிவிப்பு 

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1,898 கோடி நிதி - டிக்டாக் அறிவிப்பு 
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1,898 கோடி நிதி - டிக்டாக் அறிவிப்பு 
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு நிவாரண நிதியாக ஆயிரத்து 898 கோடி ரூபாய் வழங்கப் போவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள செயலி டிக்டாக். இந்தச் செயலியை வைத்து சமூகத்தில் பிரபலமாக மாறியவர்கள் அதிகம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்தச் செயலிக்கு அதிக மோகம் உள்ளது. இந்தச் செயலியை எதிர்ப்பவர்களும் உண்டு. பல சமூக சீர்கேட்டிற்கு இது காரணமாக உள்ளது எனக் கூறி நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன. 
இந்நிலையில், வேகமாக வளர்ந்து வரும் டிக்டாக் நிறுவனம் உலகெங்கிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண நிதியாக ஆயிரத்து 898 கோடி ரூபாய் (250 மில்லியன் டாலர்) தொகையைப் பங்களிப்பு செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டிக்டாக் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இந்த நிதி “உலக அளவில் நெருக்கடியால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ ஊழியர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களுக்குச் செலவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் இதற்கு முன்பாக கூகிள், பேஸ்புக் மற்றும் நெட்ஃபிக்ஸ், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அவர்களைத் தொடர்ந்து இப்போது டிக்டாக் நிறுவனமும் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
இது குறித்து டிக்டோக் தலைவர் அலெக்ஸ் ஜு,   “பரஸ்பர ஆதரவை வழங்குவதற்காக நாங்கள் பங்களிப்பு செய்கிறோம்” என்று  அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  “இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியான நிவாரணமாக இதை வழங்க விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார். இந்த நிதி அமெரிக்காவில் உள்ள நோய்கள் கட்டுப்பாட்டு மையங்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு ஏஜென்சி மூலம் செலவு செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com