அமெரிக்கா|மீண்டும் செயல்பட தொடங்கிய டிக்டாக் செயலி?
அமெரிக்காவில் தற்காலிமாக நிறுத்தப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கு அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. மேலும், டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே, டிக்டாக் செயலியை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்ட் டிரம்புக்கு நன்றி என்றும், நீண்ட கால தீர்வுக்கு டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், டிக்டாக் செயலிக்கு 90 நாட்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.