\
earthquake in tibet
earthquake in tibetreuters

இரண்டாக பிளந்த நிலம்! திபெத்தை மீண்டும் சிதைத்த இயற்கை! வெள்ளத்திற்கு பிறகு நடந்த கொடூரம்?

திபெத் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

நேபாளத்தில் இமயமலை பனிப்பாறைகள் உருகி கோஷி, திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பையும் ஆயிரக்கணக்கான மாயமனிதர்களையும் உருவாக்கி, சீன கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தின் கியிராங் துறைமுகப் பகுதியை கடுமையாக தாக்கியது. இந்த வெள்ளப் பாதிப்பில் இருந்து மீளாத திபெத்தை, 10 கி.மீ ஆழத்தில் 5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் மீண்டும் உலுக்கியுள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்ற பழமொழி ஒன்றை கூறுவார்கள். இந்த பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திபெத் தற்போது மாறியிருக்கிறது.. நேபாள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மீள முடியாமல் திபெத் தவித்து வரும் வேளையில், மீண்டும் எழுந்திருக்கவே முடியாதபடி தாக்குதலை நடத்தியிருக்கிறது இயற்கை.. நடந்தது என்ன? என்ற விவரங்களை பார்க்கலாம்...

இமயமலையில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட இந்த வெள்ளம், 300 கிலோ மீட்டர் வேகத்தில், சுனாமி போல் வந்து, குடியிருப்புகளை தாக்கி, பெரும் சோதத்தை ஏற்படுத்தியிருந்தது.

Nepal Flood
Nepal FloodANI

உலகத்திற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வெள்ளத்தில் சிக்கி, இதுவரை ஆயிரத்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயலால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. குறிப்பாக, அங்குள்ள கியிராங் என்ற துறைமுக பகுதியில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்த பாதிப்பில் இருந்தே திபெத் பகுதி மீள முடியாமல் தவித்து வரும் வேளையில், மீண்டும் மற்றொரு இயற்கை பேரிடர் அந்த பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. அதாவது, திபெத் பகுதியில் 5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கோப்புக் காட்சி
கோப்புக் காட்சிReuters

ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் அளித்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

திபெத் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, அந்த பகுதி மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை, இந்த நிலநடுக்கம் பாதித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com