\
ஓடுதளத்தில் இருந்து விலகி தீ பிடித்து விபத்துக்குள்ளான விமானம் - வெளியான வீடியோ

ஓடுதளத்தில் இருந்து விலகி தீ பிடித்து விபத்துக்குள்ளான விமானம் - வெளியான வீடியோ

ஓடுதளத்தில் இருந்து விலகி தீ பிடித்து விபத்துக்குள்ளான விமானம் - வெளியான வீடியோ
Published on

சீனாவில் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால், திடீரென தீப்பிடித்து எரிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம் சீனாவின் சாங்கிங் நகரில் இருந்து புறப்பட்டது. ஓடுபாதையில் ஊர்ந்து சென்ற சில விநாடிகளிலேயே விமானம் சறுக்கியதால், அதில் தீப் பிடித்தது. உடனடியாக விமானத்தில் இருந்த 113 பயணிகளும், 9 சிப்பந்திகளும் என 122 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

லேசான காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே விமானத்தில் பற்றிய தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com