\
துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 3 வயது சிறுவன் - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்
Published on

பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். குடும்பமே கொண்டாட்டத்தில் இருந்த போது திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று பார்த்த போது சிறுவன் தனது நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக சிறுவனை தீயணைப்பு நிலையத்திற்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவன் துப்பாக்கியை தனது உறவினரின் பையில் இருந்து எடுத்தது தெரியவந்தது.

இந்த வருடம் மட்டும் அமெரிக்காவில் 229 முறை சிறுவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். இதில் 97 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com