கனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு
கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பஞ்சாபை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியிலுள்ள ஆயில் ஹெரிட்டேஜ் சாலையில் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காரின் ஒட்டுநர் படுகாயம் அடைந்தார். அத்துடன் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் விபத்து நடைபெற்ற பகுதிலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் இறந்த மூன்று பேரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விபத்தில் தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 20 வயது மதிக்கத்தக்க மாணவர்கள் ஆவர். இவர்களில் தன்வீர் சிங் இந்தாண்டு தொடக்கத்தில் கனடாவிற்கு உயர்கல்வி படிக்க சென்றுள்ளார். ஹர்பிரீத் கவுர் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இருவரும் ஏப்ரல் மாதம் கனடாவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.