ருமேனியாவில் நீதித்துறையை மாற்றியமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
ருமேனியாவில் நீதித்துறையை மாற்றியமைக்க எதிர்ப்பு தெரிவித்து புக்காரெஸ்ட்-ல் நீதிபதிகள் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ருமேனியாவில் நீதித்துறையை முழுமையாக மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் புக்காரெஸ்ட் (BUCHAREST)-ல் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருடர்களின் கூடாரமாக நாடு மாறுவதை விரும்பவில்லை என்றும், நீதிக்காக ஒன்றிணைவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பியபடி நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி நடத்தினர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையை முழுமையாக மாற்றி அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நீதித்துறையை அரசியல் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதற்கான வரைவு மசோதாவை ஆளும் சமூக ஜனநாயக கட்சி கொண்டு வந்திருப்பதற்கு 1000க்கும் மேற்பட்ட நீதிபதிகளும், வெளிநாட்டு பிரதிநிதிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.