மாட்ரிட் நகரின் வழியே செம்மறி ஆட்டு மந்தையைக் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி!

மாட்ரிட் நகரின் வழியே செம்மறி ஆட்டு மந்தையைக் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி!

மாட்ரிட் நகரின் வழியே செம்மறி ஆட்டு மந்தையைக் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி!
Published on

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரின் வழியே செம்மறி ஆட்டு மந்தையைக் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வாழ்வாதாரத்துக்காக இடம்பெயர்ந்த விவசாயிகள், தாங்கள் வளர்த்த செம்மறி ஆடுகளையும் கொண்டுசென்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, 1994 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் இருப்பதால், மேட்ரிட் நகரின் முக்கிய சாலைகளில் செம்மறி ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. மேளதாளம் முழங்க நடத்தப்பட்ட இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com