வானத்திலிருந்த ஐஸ் பந்து மழை - ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி

வானத்திலிருந்த ஐஸ் பந்து மழை - ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி

வானத்திலிருந்த ஐஸ் பந்து மழை - ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி
Published on

ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்மாஸன் நகரில் கோடைப் புயலின் விளைவாக கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியாகின.

ஸ்பெயின் நாட்டில் தற்போது கோடை நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடபகுதியில் பலத்த புயற்காற்று வீசியது. இதனால், மேக கூட்டத்தில் உள்ள மழை தரும் சூல் மேகங்கள் வெகு விரைவாக குளிர்ச்சி அடைந்து ஆலங்கட்டி மழையாக பெய்யத் தொடங்கியது. 

குறிப்பாக, சொரியா என்ற பெருநகரின் அருகாமையில் உள்ள அல்மாஸன் நகரில் கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை அங்குள்ள அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கால்வாயில் படபடவென்று பந்து வடிவில் ஐஸ் கட்டிகள் விழுந்த காட்சிகளை சிலர் வீடியாவாக பதிவு செய்து, சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆலங்கட்டி மழையினால் அந்த நகரில் உள்ள ஏராளமான கார்கள் சேதம் அடைந்தன, ஐஸ் கட்டிகள் விழுந்ததால் நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆடுகளும் காயமடைந்து இறந்தன.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com