உலகம்
அமெரிக்காவில் களை கட்டியது: அகோர வேடத்தில் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற பேரணி
அமெரிக்காவில் களை கட்டியது: அகோர வேடத்தில் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற பேரணி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வருவதைப் போல வேடமணிந்து ஆயிரக்கணக்கான மக்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றது மக்களை வெகுவாக கவர்ந்தது.
ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் குழந்தைகள், பெரியவர்கள், செல்லப் பிராணிகள் என அனைவரும் அகோரமாக ஒப்பனை செய்து தெருக்களில் சென்றனர். அப்போது ஃபுளோரிடாவை தாக்கிய இர்மா புயலை கண்டித்து அவர்கள் தங்கள் கைகளில் பதாகைகளையும் ஏந்தி சென்றனர். சுமார் 6 ஆயிரம்பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக ஃபுளோரிடா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே போல் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறந்த அச்சுறுத்தும் வேடத்துக்கான போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.