பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால் அலாரம் அடிக்கும் ஸ்டிக்கர்

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால் அலாரம் அடிக்கும் ஸ்டிக்கர்
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால் அலாரம் அடிக்கும் ஸ்டிக்கர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது.

பெண்கள் பேருந்தில் செல்லும்போது, அலுவலகத்தில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம். பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கூச்சத்துடனே வாழ்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி மீடியா லேப் என்ற நிறுவனம் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க ஆடைகளில் ஒட்டிக்கொள்ளக்கூடிய ஒரு ஸ்டிக்கரை உருவாக்கியுள்ளனர். அந்த ஸ்டிக்கர்-ஐ பெண்கள் அணியும் உள்ளாடை என எந்த உடையில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம். யாராவது தவறான நோக்கத்தில் தொட்டால், உடனே அலாரம் அடிக்கும். இந்த ஸ்டிக்கர் ஒரு ஸ்மார்ட்ஃபோனை மைய்யமாகக் கொண்டு செயல்படுகிறது.

ஒரு ஸ்மார்ஃபோனுடன் இந்த ஸ்டிக்கரை இணைத்துக் கொண்டு, அதன் மூலம் நமக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என ஐந்து பேருடன் அலர்ட் போகும்படி இணைத்துக் கொள்ளலாம். தவறான நோக்கத்தில் பெண்களைத் தொட்டால், குறிப்பிட்ட ஐந்து நபர்களுக்கு இருக்கும் இடம் (Location) உள்ளிட்ட தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் ஒருவருக்கு தொலைப்பேசி அழைப்பும் செல்லும். இதை தேவைக்கு ஏற்றவாறு ஆன், ஆஃப் செய்து கொள்ளலாம். மேலும் சம்பவம் நடக்கும்போது பேச்சு உள்ளிட்ட அனைத்து சத்தங்களையும் ஸ்டிக்கர் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பதிவு செய்துவிடும், பதிவு செய்யப்படும் ஆடியோவை பின்னர் நாம் வழக்கு விசாரணையின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பை நிச்சயம் அளிக்கும் என்று எம்ஐடி நிறுவனம் கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com