பாகனுடன் விளையாடும் குறும்புக்கார யானைக்குட்டி: வீடியோ
தன்னுடைய பாகனை பணி செய்ய விடாமல் குறும்பாக தொந்தரவு கொடுக்கும் யானைக்குட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தாய்லாந்தில் உள்ள மேசாவில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் ஒரு வயதே ஆன யானைக்குட்டியும் பங்கேற்றுள்ளது. தன்னுடைய பாகனுடன் அந்த யானைக்குட்டி நட்பாகவே பழகி வந்துள்ளது. இந்நிலையில் அந்த யானைக்குட்டியின் குறும்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பாகன் மூங்கில் வேலிக்கு வண்ணம் பூசிக்கொண்டு இருக்கிறார்.
பாகனுக்கு பின்னால் தடுப்புக்குள் நிற்கும் யானைக்குட்டி, துதிக்கையால் அவரின் முதுகில் தட்டி குறும்பாக தொந்தரவு செய்கிறது. பாகன் கவனிக்காததுபோல இருக்கவே, யானைக்குட்டி அந்தத் தடுப்பில் ஏறி, பாகனை மீண்டும் சீண்டுகிறது. ஒரு கட்டத்தில் பாகன் பாசமாக கையை நீட்ட, அவரை தன் பக்கம் இழுத்து கொஞ்சி விளையாடுகிறது அந்த யானைக்குட்டி.
இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர அது வைரலாகிவிட்டது. பலரும் யானைக்குட்டியின் குறும்பு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோ: