உணவு டெலிவரி செய்பவரை இவ்வளவு கேவலமாகவா நடத்துவது? - வைரலான வீடியோ.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

கனடாவின் பிராம்ப்டனில் தனது வீடியோவை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் ஒருவர் உணவு கொண்டு வரும் பீட்சா டெலிவரி நபரை அசிங்கப்படுத்தி,அவமானப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிக்டாக் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
உணவு டெலிவரி செய்தவர்
உணவு டெலிவரி செய்தவர்x வலைதளம்

உணவு டெலிவரி செய்யும் நபரை வாடிக்கையாளர் மிகவும் மோசமாக நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவின் பிராம்ப்டனை சேர்ந்த ஒருவர் உணவு கொண்டு வரும் பீட்சா டெலிவரி நபரை அசிங்கப்படுத்தி, அருவருக்கத்தக்க வகையில் பேசி, அவமானப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது டிக்டாக் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதைக்கண்டு கொதித்த Ian Miles cheong என்பவர் தனது X வளைதளத்தளத்தில் "டிக்டாக் பதிவரின் ஐடி யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் கூறுங்கள் அவருக்கு ஒரு டிப்ஸ் ஒன்றை அனுப்ப தயாராக இருக்கிறேன்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முகம் தெரியாத ஆண் வாடிக்கையாளர், ஒரு 25 வயது மதிக்கத்தக்க உணவு டெலிவரி செய்யும் நபரை 'டம்மி' என்று அழைப்பதையும் பணம் செலுத்திய பிறகு அவரை நம்பாமல் அவரின் பணியிடத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவரிடம் கேவலமாக பேசுவதையும் கேட்கலாம். மேலும் டெலிவரி செய்யும் நபர் தனது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசும்பொழுது , அவரை டம்மி என்றும் ''Stupid brown guy" என்றும் மிகவும் மோசமாகவே அவரை கேவலப்படுத்துகிறார்.

இருப்பினும் டெலிவரி செய்யும் நபர் தனது பொறுமையை இழக்காமல் அவரிடம் பேசும் வீடியோவானது அதே முகம் தெரியாத வாடிக்கையாளரால் எடுக்கப்பட்டு அவரின் டிக்டாக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், “டெலிவரி கொடுக்கும் நபரை இப்படி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அந்த வாடிக்கையாளரை நான் வெறுக்கிறேன்” என்று கூறியுள்ளனர். சம்பந்தபட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் வாடிக்கையாளருக்கு எதிராக தனது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com