ஹெச் 4 விசா நடைமுறையை தொடர வேண்டுகோள்

ஹெச் 4 விசா நடைமுறையை தொடர வேண்டுகோள்
ஹெச் 4 விசா நடைமுறையை தொடர வேண்டுகோள்

எச் 1 பி விசா பெற்று பணிபுரிபவர்களின் வாழ்க்கைத்துணைக்கும் பணி விசா வழங்கும் நடைமுறையை தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தலைமையிலான 130 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் டிரம்ப்பிடம் இக்கோரிக்கையை வைத்துள்ளனர். அமெரிக்காவில் எச் 1 பி விசா பெற்று பணிபுரிந்து வருபவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச் 4 விசா என்ற பெயரில் பணி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெச் 4 விசா வழங்கும் நடைமுறையை கைவிட அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவில் பணிபுரியும் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் 94% பேர் இந்தியர்கள் ஆவர். இந்நிலையில் ஹெச் 1 விசா நடைமுறையை தொடர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com