
இலங்கையில் விநாயகர் கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இலங்கையின் நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை நகரத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. புதியதாக புனரமைக்கப்பட்ட இந்த கோயிலில் வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்கள் அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.