சிங்கத்தின் வாயில் சிக்கிய குட்டி.. வீரத்துடன் போராடி மீட்ட தாய்: மிரள வைக்கும் வீடியோ

சிங்கத்தின் வாயில் சிக்கிய குட்டி.. வீரத்துடன் போராடி மீட்ட தாய்: மிரள வைக்கும் வீடியோ

சிங்கத்தின் வாயில் சிக்கிய குட்டி.. வீரத்துடன் போராடி மீட்ட தாய்: மிரள வைக்கும் வீடியோ
Published on

சிங்கத்திடமிருந்து தனது குட்டியை தாய் வரிக்குதிரை போராடி காப்பாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ‘குட்டி வரிக்குதிரையின் கழுத்தை சிங்கமொன்று ஆக்ரோஷமுடன் கவ்வி இழுத்து சாய்க்கிறது. திடீரென்று ஹீரோபோல் நுழைந்த தாய் வரிக்குதிரை குட்டியை மீட்க போராடி சிங்கத்தை தள்ளிவிட்டு சண்டையிடுகிறது. இறுதியில் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் எட்டி உதைத்து குட்டி வரிக்குதிரையை காப்பாற்றுகிறது தாய் வரிக்குதிரை.

’ஆஹா… ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா… கூடிட்டாய்ங்க’ என்பதுபோல் பயத்தில் சிங்கம் தலைதெறிக்க ஓடுகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ’மனிதன் அல்ல. எல்லா உயிரினங்களும் தனது குழந்தையை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும்’ என்று கருத்திட்டு தாய் வரிக்குதிரையை பாராட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com