அமெரிக்காவை அதிரவைத்த அதிபயங்கர சூறாவளி: 100 பேர் உயிரிழப்பு?

அமெரிக்காவை அதிரவைத்த அதிபயங்கர சூறாவளி: 100 பேர் உயிரிழப்பு?

அமெரிக்காவை அதிரவைத்த அதிபயங்கர சூறாவளி: 100 பேர் உயிரிழப்பு?
Published on
அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளியில் சிக்கி சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சூறாவளி பாதிப்பால் கென்டகி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளின் கூறைகள் பறந்துவிட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சுவதாக கென்டக்கி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அர்கன்சாஸில் மருத்துவனை கூரை இடிந்து உள்ளே இருந்த ஒரு நோயாளி இறந்துள்ளார். மேலும் 20 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இல்லினாய்ஸில் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து அதற்குள் 40 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
10 மாகாணங்களில் சுழன்று அடித்த சூறாவளியில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டும் எனக் கூறப்படுகிறது. காவல் துறையினரும் மீட்புப்படையினரும் மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சூறாவளி பாதிப்பால் கென்டகி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com