உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை காக்க வன உயிர் ஆர்வலர்கள் மேற்கொண்ட வழி

உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை காக்க வன உயிர் ஆர்வலர்கள் மேற்கொண்ட வழி

உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை காக்க வன உயிர் ஆர்வலர்கள் மேற்கொண்ட வழி

வடகிழக்கு கென்யாவின் கானகத்தை வசிப்பிடமாக கொண்ட அரிய வகை வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வன உயிர் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வேட்டையாடிகளிடமிருந்து இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறைச்சிக்காக ஆப்ரிக்க கண்டத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஆப்ரிக்காவில் வாழ்ந்து வரும் ஒட்டகச்சிவிங்கியின் எண்ணிக்கையில் சுமார் 40 சதவிகிதம் வேட்டையாடப்பட்டுள்ளதாக ஆப்ரிக்க வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்திட்டுள்ளது.

“இந்த அரிய வகை வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி கடந்த 2017இல் அதன் குடும்பத்தோடு அடையாளம் காணப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இரண்டு வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்டது. அதனால் உலகில் எஞ்சி இருக்கின்ற இந்த ஒரே வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியை காக்கும் முயற்சியாக ஜிபிஎஸ் கருவியை அதன் தலைப்பகுதியில் பொருத்தி உள்ளோம். இதன் மூலம் அதன் இருப்பிடத்தை லைவாக கண்டறியலாம்” என சொல்கிறார் வனவிலங்கு ஆர்வலர் முகமது அஹ்மதுனூர்.

மரபணு கோளாறினால் அதன் அசல் நிறத்தை இழந்து வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

உலகில் அழிந்து வரும் வன விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 68293 ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றன.

நன்றி : பிபிசி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com