\
கவித்துவமாக காதலை தெரிவிக்க முயற்சி: மலை உச்சியிலிருந்து 650 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

கவித்துவமாக காதலை தெரிவிக்க முயற்சி: மலை உச்சியிலிருந்து 650 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

கவித்துவமாக காதலை தெரிவிக்க முயற்சி: மலை உச்சியிலிருந்து 650 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!
Published on

(மாதிரிப்படம்)

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஆஸ்திரிய நாட்டின் கரிந்தியா பகுதியில் உள்ள ஃபால்கெர்ட் மலை பகுதியின் உச்சியிலிருந்து விழுந்த பெண் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். 

பெயர் தெரியாத அந்த பெண்ணும், அவரது காதலரும் அந்த மலை உச்சிக்கு சம்பவத்திற்கு ஒருநாள் முன்பே டிரெக்கிங்  சென்றுள்ளனர். ஒருநாள் இரவுக்கு பிறகு அந்த பெண்ணிடம் தனது காதலை அவரது காதலர் தெரிவித்துள்ளார். கவித்துவமாக இருக்க வேண்டுமென விரும்பிய அவர் மலை உச்சிக்கு அழைத்து சென்று காதலை வெளிப்படுத்தியுள்ளார். உடனடியாக அவரது காதலை ஏற்றுள்ளார் அந்த பெண். 

(மாதிரிப்படம்)

இருப்பினும் அடுத்த நொடியே மலையை ஒட்டியிருந்த பள்ளத்தாக்கில் கால் தடுமாறி அந்த பெண் விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அவரது காதலரும் அவரை காக்க குதித்து 50 அடியிலேயே ஒரு பாறையின் முனையில் சிக்கிக்கொண்டுள்ளார். அந்த பெண் 650 அடி வரை மலையிலிருந்து வீழ்ந்துள்ளார். அங்கிருந்த பனிக்கட்டிகளின் மீது அந்த பெண் வீழ்ந்ததால் உயிர் பிழைத்துள்ளார். 

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த வழியாக சென்ற சில வழி போக்கர்கள் தான் அந்த பெண்ணை கவனித்து தகவல் சொல்லியுள்ளனர். அவர் அங்கிருந்து மீட்க்கப்படும் போது மயக்க நிலையில் இருந்துள்ளார். பாறையில் சிக்கிக்கொண்ட அவரது காதலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிக்கட்டிகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் அந்த பெண் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com