\
உக்ரைன் - ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை

உக்ரைன் - ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை

உக்ரைன் - ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை
Published on: 

ரஷ்ய படைகளுடன் போரிட ஆயுதம் தரித்த காவல்துறை அதிகாரியான தன் தந்தையை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், போர் நடக்கும் நகரங்கள் மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்தோரும் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் இர்பின் நகரிலிருந்து மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். அதில் 2 குழந்தைகளுடன் தன் மனைவியை, காவல் துறையைச் சேர்ந்த கணவன் அனுப்பி வைக்க முயல்கிறார். ஆனால், அவரது குழந்தை தந்தையை பிரிய மனமின்றி அவரையும் உடன் அழைக்கிறது. கவச உடையிலிருக்கும் அந்த தந்தை, குழந்தையின் பாசப்போராட்டத்தால் நிலைகுலைந்து செய்வதறியாது தவிக்கும் வீடியோ கல்நெஞ்சையும் கரைய செய்கிறது.

இதையும் படிக்க: ரஷ்யாவில் அனைத்து உணவகங்களையும் மூடுவதாக மெக்டொனால்டு அறிவிப்பு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com