\
வட்டி விகிதங்களை 0.75% உயர்த்திய அமெரிக்க மைய வங்கி: இந்தியாவில் எதிரொலிக்குமா?

வட்டி விகிதங்களை 0.75% உயர்த்திய அமெரிக்க மைய வங்கி: இந்தியாவில் எதிரொலிக்குமா?

வட்டி விகிதங்களை 0.75% உயர்த்திய அமெரிக்க மைய வங்கி: இந்தியாவில் எதிரொலிக்குமா?
Published on

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மைய வங்கி, வட்டி விகிதங்களை முக்கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க மைய வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

வட்டி உயர்வால் கடன் வாங்குவது குறைந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றாலும் ஏற்bகெனவே அதிகரித்திருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அதை கட்டுப்படுத்த அமெரிக்காவைப் போல இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com