அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் 2 வாரங்களாக முடங்கி கிடக்கும் அரசு பணிகள். நிதிமசோதா நிறைவேறினாலும் முடக்கம் நீடிக்கும் அபாயம்.
அமெரிக்காவில் இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் அரசு பணிகள் முடக்கத்திற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் அவையானது ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனை அடுத்து அரசு பணிகளின் முடக்கத்துக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் நிதி மசோதாவை நிறைவேற்றினர். எனினும் இதில் எல்லையில் சுவர் எழுப்புவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் செனட் அவையில் குடியரசு கட்சியினரே பெரும்பான்மையுடன் இருப்பதால் அவர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்கள் என சொல்லப்படுகிறது.
ஆனால் மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் அமெரிக்காவினுள் நுழைவதை தடுக்க சுவர் கட்ட வேண்டும் என்பதில் ட்ரம்ப் பிடிவாதமாக உள்ளார். இதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பிரதிநிதிகள் அவை ஏற்காமல், நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் இருந்தது. இதனால் 2 வாரங்களாக அரசு பணிகள் பகுதியளவு முடங்கிப் போயுள்ளது