“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை

“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை
“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை

பல்லுயிர் சூழல் பாதிப்பு, வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என ஐநா எச்சரித்துள்ளது. 

உணவு உற்பத்திகான பல்லுயிர் சூழல் குறித்து ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முதன்முறையாக 91 நாடுகளில் நடத்திய அந்த ஆய்வு அறிக்கையை ஐநா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உணவு உற்பத்திக்கு உதவும் சிறுசிறு உயிர்கள் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. 

பல்லுயிர் சூழல் பாதிப்பு விவசாய பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அதிகரித்து உணவு உற்பத்தியை குறைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம், மாசு, நீர் மற்றும் நில மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை பெருக்கம், பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு மிகப்பெரும் காரணமாக கூறப்படுகிறது. மக்கள் தொகை பெருகி வரும்  
போது அதற்கேற்ப உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான செயல்கள் பல்லுயிர் சூழலை பாதித்து உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் மூலம் உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பல்லுயிர் சூழல் பாதிப்புதான் என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
            

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com