மிரட்டல் விடுத்த அமெரிக்க துணை அமைச்சரின் பெயரை வெளியிட்ட இம்ரான்கான்

மிரட்டல் விடுத்த அமெரிக்க துணை அமைச்சரின் பெயரை வெளியிட்ட இம்ரான்கான்
மிரட்டல் விடுத்த அமெரிக்க துணை அமைச்சரின் பெயரை வெளியிட்ட இம்ரான்கான்

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க துணை அமைச்சர் டொனால்டு லு தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க வெளிநாடு ஒன்று சதி செய்வதாக இம்ரான் கான் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில்தான் வெற்றிபெற்றால் கூட அதன் பின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெளிநாடு ஒன்றில் இருந்து தனக்கு மிரட்டல் வந்தாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க துணை அமைச்சர் டொனால்டு லு-தான் தன்னை மிரட்டிய நபர் என இம்ரான் கான் பகிரங்கப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் வாயிலாக மிரட்டல் செய்தியை தனக்கு அமெரிக்க துணை அமைச்சர் அனுப்பியதாகவும் இம்ரான் கான் விளக்கியுள்ளார். இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 'ஒரு பிரதமர் கூட 5 ஆண்டு ஆட்சியை முடிக்கவில்லை'.. பாகிஸ்தானின் அரசியல் பிளாஷ்பேக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com