\
இறந்த உடல்களுடன் வாழும் வினோத மனிதன்

இறந்த உடல்களுடன் வாழும் வினோத மனிதன்

இறந்த உடல்களுடன் வாழும் வினோத மனிதன்
Published on

அமெரிக்காவில் இறந்த தாய் மற்றும் சகோதரரின் சடலங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த வினோத மனிதனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

அமெரிக்காவின் வொய்ட் பியர் லேக் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் ஜேம்ஸ் குயுப்லர். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் ஜேம்ஸின் வீட்டை போலீசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இவரின் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இறந்த சடலங்களின் ஒன்று கியுப்லரின் தாயார், மற்றும் அவரது சகோதரர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தனது தாய் மற்றும் சகோதரனை பிரிந்து வாழ மனம் இல்லாததால் தான் அவர்கள் இறந்தபின்பும் அவரது உடல்களுடன் குயுப்லர் தனிமையில் வாழ்ந்துள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com