அமெரிக்கா: பனிமலையில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் - புத்திசாலிதனத்தால் உயிர் பிழைத்த கதை!

அமெரிக்கா: பனிமலையில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் - புத்திசாலிதனத்தால் உயிர் பிழைத்த கதை!
அமெரிக்கா: பனிமலையில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் - புத்திசாலிதனத்தால் உயிர் பிழைத்த கதை!

அமெரிக்க நாட்டில் உறையும் பனி மலையில் சிக்கித் தவித்த இரண்டு மலையேற்ற வீரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டதன் மூலம் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வந்துள்ளனர். 

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள ஸ்வஸ்திக் மலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மலையேற்றப் பயிற்சியை மேற்கொண்டனர் 19 வயதான அந்த இரண்டு இளைஞர்கள். ஆனால் அவர்கள் 29-ஆம் தேதியன்று தங்கள் முகாமுக்கு திரும்பி இருக்க வேண்டும். அவர்கள் திரும்பாத காரணத்தால் புத்தாண்டு தினத்தன்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் உறை பனி நிலவி வருகிறது. 

புகாரின் அடிப்படையில் இளைஞர்களை மீட்டுக்கும் மீட்பு பணி ஆரம்பமானது. இந்த நிலையில் ஆபத்து நேரத்தில் உயிர் காக்க உதவும் "SOS" சமிக்ஞையை (Signal) அவர்கள் இருவரும் பெரிய அளவில் பணியில் எழுதியுள்ளனர். அதை கவனித்த மீட்புப் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களது பெயர் ஃபார்ன்ஸ்வொர்த் (Farnsworth) மற்றும் ஜாஸ்மெர் (Jasmer) என தெரியவந்துள்ளது. 

“தாங்கள் எப்படியேனும் மீட்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் சரியாக செயல்பட்டு இருந்தனர்” என மீட்புப் பணியை மேற்கொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவர் மட்டுமல்லாது மேலும் இருவர் இந்த மீட்புப் பணியின் போது மீட்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com