பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்; வழக்கம்போல் பணிபுரியலாம் : தலிபான் செய்தி தொடர்பாளர்

பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்; வழக்கம்போல் பணிபுரியலாம் : தலிபான் செய்தி தொடர்பாளர்
பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்; வழக்கம்போல் பணிபுரியலாம் : தலிபான் செய்தி தொடர்பாளர்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எந்த நாட்டு மக்களும் எங்களுக்கு எதிரியல்ல. நாங்களும் யாருக்கும் எதிரியல்ல. அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர உதவிய ஆப்கான் மக்களுக்கு பாராட்டுகள். அண்டை நாடுகளுக்கு எதிராக ஆப்கான் மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தங்கள் ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல் பணிபுரியலாம். அதற்கு தடை இருக்காது.

முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் படைகள் உள்ளன என்று அனைத்து வெளிநாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். யாரையும் பலிவாங்கும் எண்ணம் தலிபானுக்கு இல்லை. தலைநகர் காபூலின் நுழைவுவாயிலில் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அரசு தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. அவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் முடிவு செய்துள்ளது. அதன்படி அவர்கள் கல்வி கற்கலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The security of embassies in Kabul is of crucial importance to us. We would like to assure all foreign countries that our forces are there to ensure the security of all embassies, missions, international organizations, and aid agencies: Taliban spokesperson Zabihullah Mujahid <a href="https://t.co/tmMKJifZc9">pic.twitter.com/tmMKJifZc9</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1427649944001794051?ref_src=twsrc%5Etfw">August 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதனிடையே ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பயணிகள் விமானங்கள் உள்ளிட்டவை காபூல் விமான நிலையத்தில் தரையிறங்க, புறப்பட முடியும் எனவும் காபூல் விமான நிலையத்தில் 3,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல் பணிபுரியலாம். அதற்கு தடை இருக்காது. முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com