20 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்த பர்ஸை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீஸ்.!
அயர்லாந்து காவல்துறை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் தொலைத்த மணி பர்ஸை மீண்டும் அவரிடமே சேர்த்துள்ளது.
‘இருபது ஆண்டுகால தொடர் மர்மம் 24 மணிநேரத்தில் தீர்க்கப்பட்டது!’ என்ற கேப்ஷனுடன் ஃபேஸ்புக்கில் அந்த பர்ஸின் படத்தை போஸ்ட் செய்துள்ளது அயர்லாந்து காவல்துறை.
https://www.facebook.com/angardasiochana/posts/10158498909023001
“அந்த பர்ஸை அதன் உரிமையாளர் டல்லாட் கார்டாவிடம் நேற்று கொடுத்தோம். அது பல ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்தது என்பது தெரிகிறது. அதை திறந்தபோது அதன் உரிமையாளரின் விவரங்கள் இருந்தன. அதை கொண்டு உரிமையாளரை அடையாளம் கண்டு ஒப்படைத்துள்ளோம்” என அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட அந்த படத்திற்கு ஆயிர கணக்கில் லைக்குகளையும், நூற்றுக் கணக்கிலான கமெண்டுகளையும் அள்ளி தெளிக்கின்றனர் ஃபேஸ்புக் பயனர்கள்.