\
அன்று முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.. இன்று புறாவுக்கு கார் கொடுத்த  துபாய் இளவரசர்

அன்று முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.. இன்று புறாவுக்கு கார் கொடுத்த துபாய் இளவரசர்

அன்று முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.. இன்று புறாவுக்கு கார் கொடுத்த துபாய் இளவரசர்
Published on

கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் பாரி கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு தான் ஏறி வந்த தேரையே கொடுத்தவர் என நாம் எல்லோரும் படித்திருப்போம். அது போல துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புறாக்கள் தனது SUV ரக காரின் மீது கூடு கட்டிய காரணத்தினால் அதை பயன்படுத்த மறுத்துள்ளார்.

அவரது மெர்சிடிஸ் SUV ரக காரின் பேனட் மீது புறா கூடு கட்டியிருந்ததை பார்த்தார் அவர். அதோடு அந்த கூட்டில் இருந்த முட்டைகள் குஞ்சுகளாக வெளிவரும் வரை இந்த காரை பயன்படுத்த போவதில்லை எனவும் இளவரசர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர புறாக்கள் உதவும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

"சில நேரங்களில் வாழ்க்கையில் சிறிய விஷயங்களே போதுமானதாக இருக்கும்" என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் அவர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com