\
The price of gold will drop sharply due to a decision taken by the US
Federal Reserve bank decisionReuters

தங்கம் வாங்குபவர்கள் உஷார்|அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு.. ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா விலை?

அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முடிவால் தங்கத்தின் விலை கடுமையாக குறையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published on: 

உலகளாவிய வணிகத்தில் சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமாகவும், சர்வதேச வங்கிப் பரிவர்த்தனை அமைப்பான SWIFT-ல் நிகழும் மொத்தப் பரிவர்த்தனைகளில் 90 சதவீத வர்த்தகமும் அமெரிக்க டாலரிலேயே நடைபெற்று வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம், இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலைகளும் டாலரிலேயே நிர்ணயிக்கப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன.

Federal Reserve bank
Federal Reserve bankReuters

இதனால் டாலரில் ஏற்படும் சிறு மாற்றங்கள்கூட உலகளவில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த அமெரிக்க டாலர் தொடர்பான முக்கிய முடிவுகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கியே எடுத்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் தொடர்பான புதிய தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், அது உலகளவில் பங்குச் சந்தை, தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்மட்டத்திலேயே தொடர முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதத்தைச் சராசரியாக 4.1% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன.

Reuters

இந்த அறிவிப்பு வெளியானதும் அமெரிக்க அரசு பாண்டுகளின் லாப விகிதம் என்பதால் அமெரிக்க டாலர் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், அது எப்போதும் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து, அதன் விலையில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த வட்டி விகித உயர்வால் பிற நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் பிற நாடுகள் நாணயங்களில் தங்கம் வாங்குவது சற்றே விலையுயர்ந்ததாக மாறும். இதன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உலகளவில் குறையும் நிலை உருவாகும்.

இதுபோன்ற காரணங்களால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தங்கத்தின் விலை சவரனுக்கு 1,09,680 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், அதன் விலையில் வீழ்ச்சி இருந்தாலும் 1 லட்சத்துக்கும் கீழே இறங்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The price of gold will drop sharply due to a decision taken by the US
ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு : கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல்.. சாமானிய மக்களுக்கு பாதிப்பா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com