\
ரஷ்யா தாக்குதல் எதிரொலி: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை

ரஷ்யா தாக்குதல் எதிரொலி: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை

ரஷ்யா தாக்குதல் எதிரொலி: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை
Published on

உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்கி வருவதால், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 155 ரூபாய் உயர்ந்து, 4ஆயிரத்து 874 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்து, 38ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 70காசு அதிகரித்து 71ரூபாய் 40காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா தாக்குதல் எதிரொலியாக, பங்குச் சந்தையிலிருந்த பணத்தை எடுத்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையும் சரிவடைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com