\
President of Israel has taken an important decision
President of Israel has taken an important decision Reuters

நெதன்யாகுவுக்கு அடுத்த அதிர்ச்சி : முக்கிய முடிவை எடுத்த இஸ்ரேல் அதிபர்.. நடந்தது என்ன?

இஸ்ரேலின் புதிய அரசு குறித்து முக்கிய முடிவை இஸ்ரேல் அதிபர் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.

அதிக இடங்களில் வென்ற கூட்டணி என்ற காரணத்தால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) நெதன்யாகுவை முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், காடி ஐசென்கோட்டிற்கு (Gadi Eisenkot) இஸ்ரேலின் 38வது புதிய அரசை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது. இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்துள்ளதால் இஸ்ரேல் அதிபர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பெரும்பான்மையை நிரூபிக்க காடி ஐசென்கோட்டிற்கு 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபரின் இந்த அழைப்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் (Likud) கட்சி அதிகபட்சமாக 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அவரின் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மறுதேர்தல் நடத்த இஸ்ரேல் அதிபர் உத்தரவிடுவார் என நெதன்யாகு ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆட்சியமைக்க ஐசென்கோட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அமைச்சரவையை அமைப்பதில் ஐசென்கோட் பல சவால்களைச் சந்திக்க நேரிடும் என அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

President of Israel has taken an important decision
ட்ரம்ப் தோல்வியால் நடந்த மாற்றம்.. நிம்மதி பெருமூச்சு விடும் உலக நாடுகள்.. நடந்தது என்ன?