“ஆப்கானிஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல..”

வடக்கு ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தின் மலைப்பகுதியில், 6 பேரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்ட்விட்டர்

வடக்கு ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தின் மலைப்பகுதியில் 6 பேரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய விமானம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இது இந்திய விமானம் இல்லை என்று இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட DF-10 Dassault falcon என்ற சிறியரக ஆம்புலன்ஸ் விமானம்தான் ஆப்கானிதானின் பதக்ஷான் மாகாணத்தின் உயரமான மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிறியரக விமானமானது ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தபடுகிறது.

DF-10 Dassault falcon விபத்து
DF-10 Dassault falcon விபத்து

இந்த ஆம்புலன்ஸ் விமானமானது தாய்லாந்திலிருந்து மாஸ்கோவிற்கு 6 பேருடன் பயணப்பட்டுள்ளது. வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியாவில் கயா நகரத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு மீண்டும் இந்த விமானமானது உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவை நோக்கி சென்றுள்ளது. அப்போதுதான் ஆப்கானிஸ்தான் பகுதியை கடக்கும் சமயத்தில் விமானமானது கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பை இழந்திருக்கின்றது.

ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆப்கானிஸ்தானின் ரேடாரில் இருந்து ரஷ்ய பதிவுசெய்யப்பட்ட மருத்துவ விமானம் காணாமல் போனதாக தகவல் தெரிவித்து, அதை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

DF-10 Dassault falcon விபத்து
DF-10 Dassault falcon விபத்து

அப்படியான சூழலில்தான் ஆப்கானிஸ்தான் படஷான் மாகாணாத்தின் உயரமான மலைப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான விவரம் தெரியவந்தது. உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு ஆப்கானிஸ்தானின் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இதைவைத்தே காணாமல் போன விமானம்தான் இது என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக குறித்த தகவல் இல்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில், விபத்துக்குள்ளானது இந்திய விமானம் என்று ஆப்கானிஸ்தானின் உள்ளூர் செய்திகள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதை மறுத்தது.

இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது X வளைதள பக்கத்தில், “இது இந்திய விமானம் அல்ல... எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியாவின் கயா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com