\
The number of confirmed Ebola cases has risen to 11,042.
The number of confirmed Ebola cases has risen to 11,042.Reuters

எபோலாவின் கோரத்தாண்டவம்... 5,387 உயிர்கள் பலி; காங்கோவில் நடப்பது என்ன?

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) எபோலா வைரஸ் பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,387 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published on: 

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசு (DR Congo) மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. WHO அமைப்பு இந்த வைரஸ் பரவலை சர்வதேச அளவில் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக (Public Health Emergency of International Concern) கடந்த மே மாதமே அறிவித்திருந்தது.

காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, மே 2026-இல் தொடங்கிய இந்த எபோலா தொற்று காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 11,042 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதி பேர் அதாவது 5,387 பேர் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ இதுவரை 16 முறை எபோலா பரவலால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், 17 முறையாக பரவும் இந்த பரவலில் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, காங்கோ வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய எபோலா பரவல்களில் ஒன்றாக இந்த பாதிப்பு பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட எபோலா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஆயுத மோதல்கள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறை, மோசமான சாலைப் போக்குவரத்து மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அரசுக்கு பெரும் தடையாக உள்ளன.

The number of confirmed Ebola cases has risen to 11,042.
The number of confirmed Ebola cases has risen to 11,042.Reuters

இந்த முறை பரவும் 'புண்டிபுக்யோ' (Bundibugyo) ரக எபோலா வைரஸுக்கு அதிகாரப்பூர்வ தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளோ இதுவரை ஒப்புதல் பெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் பெருமளவில் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

The number of confirmed Ebola cases has risen to 11,042.
The number of confirmed Ebola cases has risen to 11,042.Reuters

இந்த வைரஸ் காங்கோவைத் தாண்டி உகாண்டா, கென்யா மற்றும் நைஜீரியா போன்ற பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ளதால் இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிகப்பரந்த அளவில் பரவிய எபோலா தொற்றாக மாறியுள்ளது. நோயை ஆரம்பத்தில் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டின் கிழக்குக் பகுதியில் தொடரும் ஆயுதக் குழுக்களின் மோதல்கள் மற்றும் சீர்குலைந்த சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உள்ளதாக ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) வெளியிட்ட அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸ் காரணமாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு நபர் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளது இதன் தீவிரத்தன்மையை உணர்த்தியுள்ளது.

கொரோனாவில் இருந்து ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஐ.நா அமைப்பு இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வோருக்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்வதோடு, பல்வேறு நாடுகள் உடல் பரிசோதனையையும் கட்டாயமாகியுள்ளன.

The number of confirmed Ebola cases has risen to 11,042.
இந்திய உயர் அதிகாரிகளுக்கே சம்மன் : அமெரிக்க நீதிமன்றம் அடாவடி.. அஜித் தோவல் வழக்கில் நடந்தது என்ன?